வணக்கம் உறவுகளே !!! எனது இந்த இணையத்தளமானது விளையாட்டுப்பிரியர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். இதனை பயன்படுத்தி உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Saturday, September 17, 2011

பன்னிக்குட்டிகளின் காற்பந்தாட்டம்

`விளம்பர ராஜா’ டோனி!


 தொலைக்காட்சியில் அதிகமான விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி.
சர்வதேச பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரையே டோனி பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்பது ஆச்சரியச் செய்தி.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 24 நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி விளம்பரத்தில் `பளீரிட்டிருக்கிறார்’ டோனி. அதேநேரம் ஷாருக்கான் 16 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும், சச்சின் 15 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும் தோன்றியிருக்கின்றனர். ஊடக ஆய்வு ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சச்சின், ஷாருக்கானை மட்டுமல்ல, மேலும் பல பாலிவுட் அழகுத் தாரகைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார் டோனி. பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்களில் இந்த முன்னணி நடிகைகள் மட்டும் 45 சதவீதப் பங்கை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் டி.வி. பிரியராக இருந்தால், கரீனா கபூர், சோனம் கபூர், கஜோல், ஐஸ்வர்யா ராய் ஆகியோரே சின்ன திரையில் அடிக்கடி புன்னகைக்கும் அழகு நட்சத்திரங்கள் என்று அறிந்திருப்பீர்கள்.
முன்பு குறிப்பிட்ட ஆய்வின்படி, பிரபலங்கள் தோன்றும் டி.வி. விளம்பரங்களில் இந்தி நடிகர், நடிகையர் 42 சதவீதத்தையும், விளையாட்டு நட்சத்திரங்கள் 10 சதவீப் பங்கையும் வகிக்கின்றனர்.
தனது நீண்ட விளம்பரப் பட்டியலை இரண்டாண்டு காலத்துக்கு நிர்வகிப்பதற்கு `ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் அண்ட் மைண்ட்ஸ்கேப்ஸ்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஜூலையில் 210 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டோனி.
இந்திய விளையாட்டுலக வரலாற்றிலேயே இது ஒரு புதிய சாதனை. 2006-ம் ஆண்டில் `ஐகானிக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் சச்சின் தெண்டுல்கர் மூன்றாண்டு காலத்துக்கு ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் போட்டதே இதற்கு முன் அதிகபட்சமாக இருந்தது.
டோனி, கிரிக்கெட் களத்தில் நாயகனாகத் திகழும் வரை, அவரை விளம்பர உலகிலும் யாரும் அசைக்க முடியாது என்பது உறுதி!

Sunday, September 11, 2011

காற்பந்தாட்டத்தில் ஒரு ஜாலியான ஆட்டம்.... பாருங்க!!!

இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு உளவியல்


இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை அவசியம்: திலக்கரத்ன தில்ஷான்.


இந் நாட்களில் அவுஸ்திரேலிய குழவினருடன் இடம்பெறும் கிரிகெட் போட்டிகளில் பின்தங்கிய நிலையிலிருக்கும் இலங்கை கிரிகெட் குழுவினரை உளவியல் ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரும் காலங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை கிரிகெட் அணித் தலைவர் திலக்கரத்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் நேற்று பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி முடிவின் பின்னர் தில்ஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தமது அணியினர் எவ்வளவோ அர்பணிப்புடன் பயிற்சியில் ஈடுபட்டும், திட்டமிட்டும் மைதானத்திற்குள் நுழைந்த போதும் போட்டியில் பங்கு பெற்றும் போது மிகவும் உளவியல் ரீதியில் பின்னடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந் நிலமை தொடர்ந்து நீடித்தால் அணியிலுள்ள வீரர்களது உளவியல் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
elutamila

Saturday, September 10, 2011

கண்ணுக்கு குளிர்ச்சியான கிறுக்கு விளையாட்டுக்கள்

இந்திய அணி மீண்டும் தோல்வி இங்கிலாந்து வெற்றி தொடர்கிறது


இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, “டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி, கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. “டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், பீல்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் வினய் குமார்,மனோஜ் திவாரி நீக்கப்பட்டு, ரவிந்திர ஜடேஜா, ஆர்.பி.சிங் சேர்க்கப்பட்டனர்.
துவக்கம் சரிவு: இந்திய அணிக்கு பார்த்திவ் படேல், ரகானே இணைந்து துவக்கம் கொடுத்தனர். கடந்த இரு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி நேற்று அதிர்ச்சி கொடுத்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில், ரகானே, “டக் அவுட்டானார். சீனியர் டிராவிட் (2), ரன் அவுட்டானார். பார்த்திவ் படேல், 19 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லி (7) விரைவில் திரும்பினார்.
ரெய்னா ஏமாற்றம்: இதன் பின் ரெய்னா, கேப்டன் தோனி இணைந்து ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ரெய்னா (21), மற்றொரு அதிர்ச்சி கொடுக்க, இந்திய அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.
தோனி அரைசதம்: பின் தோனி, ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இவர்களது பொறுப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, சர்வதேச அரங்கில் 39 வது அரைசதம் கடந்தார்.
ஜடேஜா அபாரம்: இவருக்கு நல்ல “கம்பெனி கொடுத்த ஜடேஜா, தனது ஐந்தாவது அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில், 69 ரன்கள் எடுத்த தோனி அவுட்டானார். அஷ்வின் வந்த வேகத்தில் இரு பவுண்டரிகள் விளாசினார். ஜடேஜா தன்பங்கிற்கு 2 பவுண்டரிகள் அடித்தார். இவர்களது அதிரடி காரணமாக, பேட்டிங் “பவர்பிளேயில் இந்திய அணி 51 ரன்கள் குவித்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, 78 ரன்கள் எடுத்து திரும்பினார்.
இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (36), பிரவீண் குமார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மழை இடையூறு: எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு குக், கீஸ்வெட்டர் இணைந்து அசத்தல் துவக்கம் கொடுத்தனர். குக் 23 ரன்கள் எடுத்தார். அதிரடியில் மிரட்டிய கீஸ்வெட்டர் அரைசதம் (51) கடந்து போல்டானார். டிராட் (11) அஷ்வினிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது, இலக்கு (“டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 43 ஓவரில் 218 ரன்கள்) மாற்றப்பட்டது. பெல் (23) ரன் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் (20) நிலைக்கவில்லை. பிரஸ்னன் 28 ரன்கள் எடுத்தார். போபரா 40 ரன்னுக்கு வெளியேறினார்.
இங்கிலாந்து அணி 41.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுவான் (9), பிராட் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது.
elutamila

வலுவான நிலையில் அவுஸ்திரேலியாவும் போராடத் தயார்.


அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலானா 2 வது போட்டியின் இரண்டாம் நாளான இன்று விக்கட் இழப்பின்றி 60 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா அணி ஆட ஆரம்பித்தது.
காலையில் இலங்கை அணி பந்து வீச்சில் ஓங்கியே இருந்தது.
முதல் 3 விக்கட்டுக்களையும் விரைவில் வீழ்த்திய போதும் பின்னர் ஜோடி சேர்ந்த மார்ஷ் (87), ஹசி (76) பிரிக்க முடியாத சுவரை கட்டியெழுப்பினார்கள்.
போதிய வெளிச்சமின்மை காரணமாக 91.3 ஓவர்களே எதிர் கொண்ட நிலையில் 3 விக்கட்டுக்களை இழந்து 264 ஓட்டத்தை பெற்ற வேளையில் 2ம் நாள் அட்டம் நிறுத்தப்பட்டது.
பந்து வீச்சில் வெலகெதரா, லக்மல், ரண்டிவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினார்கள்.
இன்றைய நாளில் ரண்டிவ் மிகவும் இறுக்கமாக பந்து வீசியிருந்தார். இருந்தாலும் ஒரு விக்கட்டை மட்டுமே கைப்பற்றிக் கொண்டார். (29-6-49-1)
3ம் நாளான நாளை தான் போட்டிப் போக்கு ஊர்ஜிதமாக நிர்ணயிக்கப்படும்.
thaks to elutamila