வணக்கம் உறவுகளே !!! எனது இந்த இணையத்தளமானது விளையாட்டுப்பிரியர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். இதனை பயன்படுத்தி உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Saturday, September 10, 2011

இந்திய அணி மீண்டும் தோல்வி இங்கிலாந்து வெற்றி தொடர்கிறது


இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் தோல்வி தொடர்கிறது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, “டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது போட்டி, கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. “டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் அலெஸ்டர் குக், பீல்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் வினய் குமார்,மனோஜ் திவாரி நீக்கப்பட்டு, ரவிந்திர ஜடேஜா, ஆர்.பி.சிங் சேர்க்கப்பட்டனர்.
துவக்கம் சரிவு: இந்திய அணிக்கு பார்த்திவ் படேல், ரகானே இணைந்து துவக்கம் கொடுத்தனர். கடந்த இரு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி நேற்று அதிர்ச்சி கொடுத்தது. ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில், ரகானே, “டக் அவுட்டானார். சீனியர் டிராவிட் (2), ரன் அவுட்டானார். பார்த்திவ் படேல், 19 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லி (7) விரைவில் திரும்பினார்.
ரெய்னா ஏமாற்றம்: இதன் பின் ரெய்னா, கேப்டன் தோனி இணைந்து ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் பொறுப்பற்ற முறையில் விளையாடிய ரெய்னா (21), மற்றொரு அதிர்ச்சி கொடுக்க, இந்திய அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறியது.
தோனி அரைசதம்: பின் தோனி, ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இவர்களது பொறுப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, சர்வதேச அரங்கில் 39 வது அரைசதம் கடந்தார்.
ஜடேஜா அபாரம்: இவருக்கு நல்ல “கம்பெனி கொடுத்த ஜடேஜா, தனது ஐந்தாவது அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில், 69 ரன்கள் எடுத்த தோனி அவுட்டானார். அஷ்வின் வந்த வேகத்தில் இரு பவுண்டரிகள் விளாசினார். ஜடேஜா தன்பங்கிற்கு 2 பவுண்டரிகள் அடித்தார். இவர்களது அதிரடி காரணமாக, பேட்டிங் “பவர்பிளேயில் இந்திய அணி 51 ரன்கள் குவித்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, 78 ரன்கள் எடுத்து திரும்பினார்.
இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (36), பிரவீண் குமார் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மழை இடையூறு: எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு குக், கீஸ்வெட்டர் இணைந்து அசத்தல் துவக்கம் கொடுத்தனர். குக் 23 ரன்கள் எடுத்தார். அதிரடியில் மிரட்டிய கீஸ்வெட்டர் அரைசதம் (51) கடந்து போல்டானார். டிராட் (11) அஷ்வினிடம் வீழ்ந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது, இலக்கு (“டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 43 ஓவரில் 218 ரன்கள்) மாற்றப்பட்டது. பெல் (23) ரன் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் (20) நிலைக்கவில்லை. பிரஸ்னன் 28 ரன்கள் எடுத்தார். போபரா 40 ரன்னுக்கு வெளியேறினார்.
இங்கிலாந்து அணி 41.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுவான் (9), பிராட் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது.
elutamila

No comments:

Post a Comment